நெய் ஆப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

நெய் ஆப்பம்

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 2கப் பச்சரிசி
  2. 2 கப் வெல்லம்
  3. 2 வாழைப்பழம்
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி,அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அத்துடன் வாழைப்பழம், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் ஏலக்காய் தூள்,பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    பணியாரம் செய்யும் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து காய்ந்ததும்,அரைத்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் சேர்க்கவும்.

  6. 6

    மிதமான சூட்டில் வேக வைக்கவும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால் நெய் ஆப்பம் தயார்.

  7. 7

    தயாரான நெய் அப்பத்தை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

  8. 8

    இப்போது மிகவும் சுவையான,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பி சுவைக்கும் நெய் ஆப்பம் அருமையாக தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes