உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?
உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் வெள்ளை உருட்டு உளுந்து
  2. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  3. 1 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 10 கருவேப்பிலை
  7. 1 சிறிய ஸ்பூன் சீரகம்
  8. தேவையானஅளவு பொடி உப்பு
  9. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. பொறிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெள்ளை உளுந்தை மூன்று முறை நன்றாக கழுவி ஊற வைக்காமல் உடனே கிரைண்டரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சுமாராக 20 நிமிடங்கள் அரைத்து வெண்ணை போல பதம் வந்ததும் ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும்.

  2. 2

    இதோடு அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை சீரகம் கூடவே பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    அகலமான பேனில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், தயார் செய்த மாவிலிருந்து வடைகளை தட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes