உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 ஆழாக்கு வெள்ளை உளுந்து
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 அங்குலம் இஞ்சி
  4. 1/4 தேக்கரண்டி சீரகம்
  5. 1/4 தேக்கரண்டி மிளகு
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை நன்றாக கழுவி ஊற வைக்காமலேயே கிரைண்டரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பொங்கி வரும்வரை அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும். கூடவே சீரகம் மிளகு மற்றும் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

  3. 3

    ஒரு வட சட்டியில் பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுந்து வடை மாவை சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகப் பொரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Similar Recipes