மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 4 பெரிய வெங்காயம்
  3. 4 பெரிய தக்காளி
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 4 ஒரு இன்ச் பட்டை
  9. 5 ஏலக்காய்
  10. 4 லவங்கம்
  11. 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. 2கை அளவு கொத்தமல்லி
  13. 1 கையளவு புதினா
  14. 1/2 கிலோ சீரகசம்பா அரிசி
  15. தேவையான அளவுஉப்பு
  16. 50 மில்லி தயிர்
  17. 150 மில்லி நல்லெண்ணெய்
  18. 50 மில்லி நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து நல்லெண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  2. 2

    குக்கரில் மட்டன் சிறிதளவு வெங்காயம் தக்காளி எண்ணெய் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் இவை அனைத்தையும் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்

  4. 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    மசாலா நன்கு வதங்கியதும் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் அந்த மசாலாவில் வேக வைத்துள்ள மட்டனை மட்டும் சேர்த்து கிளறி

  8. 8

    ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  9. 9

    தண்ணீர் கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து உப்பு மற்றும் காரம் சரிபார்த்து மீடியம் ஃப்ளேமில் வைத்து வேக விடவும்

  10. 10

    அரிசி நன்கு வெந்ததும் சிம்மில் வைத்து தம்மில் விடவும் இப்போது பிரியாணி பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA
அன்று

Similar Recipes