மைசூர் பாக்(mysore pak recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#DE
பாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி...

மைசூர் பாக்(mysore pak recipe in tamil)

#DE
பாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
8பேர்
  1. 1கப் கடலை மாவு
  2. 1.5கப் சீனி
  3. 3/4கப் எண்ணெய்
  4. 1/4கப் நெய்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அடி கனமான கடாயில் கடலை மாவு சேர்த்து வாசம் வரும் வரை,கலர் மாறாமல் வறுக்க வேண்டும்.

  3. 3

    வறுத்த மாவை சலித்து, அதனுடன் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து சீனி மற்றும் 3/4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்ததும் தீயை சிம்மில் வைத்து, வெள்ளை நிறத்தில் நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.

  6. 6

    நுரைத்து வந்ததும், கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்க்கவும். இனி கைவிடாமல் கலந்து விடவும்.

  7. 7

    கடலை மாவு வெந்து வரும். கைவிடாமல் கலந்து,இன்னும் 'திக்'காக மாறும் வரை கலந்து விட வேண்டும்.

  8. 8

    கலவை நன்றாக திக்-கானதும் ஓரங்களில் ஒட்டாமல்,கடாயின் அடியில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து நெய் தடவிய ட்ரெயின் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும்.

  9. 9

    ஆறிய பின்பு துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

  10. 10

    அவ்வளவுதான். சுவையான சாப்ட்-டான மைசூர்பாக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes