தேங்காய்பால் ரவை பணியாரம்(coconut milk rava paniyaram recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#DE

பணியாரம்எங்கள்வீட்டில்எல்லா விழாக்களுக்கும் முதல் இடம்.ஏற்கனவே போட்டுஇருக்கிறேன்.இந்த தீபாவளிக்கு நேற்று
ஒரு சின்ன மாற்றம் தண்ணீர் அளவு குறைத்து தேங்காய் பால் சேர்த்தேன். ரொம்பநன்றாக இருந்தது.செய்வது எளிது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்ரவை -
  2. 1 கப்மைதா -
  3. 1 கப்சர்க்கரை-
  4. 1 கப்தேங்காய்பால்-
  5. தேவைக்குதண்ணீர்-
  6. தேவைக்குஎண்ணெய்-
  7. 1 பின்ச்சமையல்சோடாஉப்பு -(விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.ரவையைமட்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    தேங்காயைஅரைத்து 1 கப்பால்எடுத்துக்கொள்ளவும். முதல் பால்போதும்.ஊறவைத்த ரவை,மைதா, தேங்காய்பால்,சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.தோசைமாவு பதம்வரனும். சமையல் சோடா 1 பின்ச் போடவும்.நன்கு கலந்துவிடவும்.தண்ணீர்தேவையென்றால்விடவும். சர்க்கரை சேர்த்தாலே தண்ணீர்விடும்.பார்த்து சேர்த்தனும்.சின்ன குழி கரண்டியில் மாவு எடுத்து ஊற்றனும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.ஒரு கரண்டி மாவு ஊற்றவும். அது மேலே வந்ததும் அடுத்து ஊற்றவும்.சிம்மில் வைத்து சுடவும்.இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.ரொம்பசிவக்க வேண்டாம்.

  4. 4

    அருமையான சுவையான தேங்காய்பால் ரவை பணியாரம் ரெடி.செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes