ரோஸ் லட்டு (Rose Laddu)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
#Deepavali #Kids2

ரோஸ் லட்டு (Rose Laddu)

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
#Deepavali #Kids2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் பன்னீர்(Home made)
  2. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் பவுடர்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 3 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1/4 டீஸ்பூன் ஸ்ட்ராபெரி பிளேவர் எஸ்சென்ஸ்
  6. திராட்சை அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தயார் செய்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து, தேங்காய் பவுடர், சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கலக்கவும்.

  2. 2

    பத்து நிமிடங்கள் கலந்ததும், கெட்டியாகி வந்தவுடன் ஸ்ட்ராபெரி பிளேவர் எசென்ஸ் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.

  3. 3

    நெய் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் சூடுசெய்து, கலந்து ஓரங்கள் ஒட்டாமல் வந்து, நெய் பிரியும் போது இறக்கவும்.

  4. 4

    ஓரளவு சூடாறியவுடன் கையில் கொஞ்சம் நெய் தடவிக்கொண்டு விருப்பப்பட்ட வடிவில் உருண்டைகள் பிடித்து மேலே திராட்சை வைத்து அலங்கரித்தால் சுவையான ரோஸ் லட்டு தயார்.

  5. 5

    இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் வைத்து அனைவரும் சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes