பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு (Green Capsicum tamarind gravy)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை குடைமிளகாய்,கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம்,பூண்டு தோல் உரித்து, இஞ்சி,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கிய மிளகாயை எடுத்து தனியாக வைத்துவிட்டு, அதே எண்ணெயில் கடுகு, உளுந்து பருப்பு,வற்றல்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பொரிந்ததும் முழுசாக உரித்து வைத்துள்ள சாம்பார் வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
அத்துடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி,தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீர் மிளகாய் தூள்,தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 9
மசாலா நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை சேர்த்து கலந்து,மேலும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
மேலே எண்ணெய் பிரிந்து வந்ததும்,வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு தயார்.
- 11
தயாரான புளிக்குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் அருமையான சுவையில் பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு சுவைக்கத் தயார்.
- 12
இந்த புளிக்குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)
#hf இது சுலபமாகவும் செய்யலாம் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.. Muniswari G -
-
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
வெண்டைக்காய் வறுகடலை புளிக்குழம்பு (vendaikkaai varukadalai pulikulambbu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
-
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala
More Recipes
கமெண்ட் (6)