*தக்காளி, ஊறுகாய்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது.

*தக்காளி, ஊறுகாய்*

தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
10 பேர்
  1. பழுத்த தக்காளி 1 கி
  2. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  3. தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  5. கல் உப்பு ருசிக்கு
  6. வறுக்க:- கடுகு 1 1/2 ஸ்பூன்
  7. வெந்தயம் 1 1/2 ஸ்பூன்
  8. தாளிக்க:- கடுகு 1 1/2 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 2 டீ ஸ்பூன்
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. ந.எண்ணெய் 1/4 கப்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை போட்டு கருகாமல் வறுத்து தட்டில் ஆற விடவும்.

  4. 4

    ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு, நறுக்கின தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

  6. 6

    நன்கு ஆறியதும், பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.

  7. 7

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு நன்கு பொரிந்ததும், ம.தூள், மி.தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  8. 8

    தாளித்ததும், அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கியதும், அரைத்த பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு, கொதித்து கெட்டியானதும், மேலே, 2 ஸ்பூன், ந.எண்ணெய் விட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.

  9. 9

    பிறகு ஒன்று சேர கிளறி, மேலே காய்ச்சாத ந.எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு இறக்கவும்.

  10. 10

    இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.

  11. 11

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*தக்காளி ஊறுகாய்* தயார். இது, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில், நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

  12. 12

    குறிப்பு:- கடுகு, வெந்தயத்தை, அவரவருக்கு ஏற்ப, வறுத்து பொடித்து ஸ்டோர் பண்ணி, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்பட்டால், கொதிக்கும் போது, வெல்லம் சிறிய கட்டி சேர்த்துக் கொள்ளலாம். நான் வெல்லம் சேர்க்கவில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes