*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
10 பேர்
  1. பொட்டுக்கடலை 2 கப்
  2. நாட்டுச் சர்க்கரை 1 கப்
  3. உருக்கிய நெய் 1/4 கப்
  4. ஏலத்தூள் 2 ஸ்பூன்
  5. நறுக்கின பாதாம் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
  6. அலங்கரிக்க:- பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

  2. 2

    அரைத்ததை நன்கு சலித்து பௌலில் போடவும்.

  3. 3

    சலித்த மாவில், நறுக்கின பாதாம் துண்டுகள்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்.

  4. 4

    பிறகு விருப்பமான அளவிற்கு உருட்டி, நடுவில் குழி செய்து, பாதாம் துண்டுகளை நடுவில் வைத்து அலங்கரிக்கவும்.

  5. 5

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பொட்டுக்கடலை பேடா* தயார்.

  6. 6

    குறிப்பு:- இந்த ரெசிபி செய்வது சுலபம் என்பதால், step by step புகைப்படம் எடுக்கவில்லை. நான் செய்த இந்த அளவிற்கு 34 பேடாக்கள் வந்தது. செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes