மிருதுவான  இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

டிப்ஸ்:

# மாவு அரைக்க ஐஸ் வாட்டரை பயன்படுத்தவும். இதனால் மாவின் உபரி அதிகம் கிடைக்கும். மேலும் இட்லி தோசை இரண்டும் சாப்டாக இருக்கும்.

# இட்லி அரிசியும் பச்சரிசியும் சரி சம அளவு சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இட்லி அரிசியை அதிகாகவும் பச்சரிசி குறைவாகவும் சேர்க்கலாம். ரேஷன் அரிசியும் பயன்படுத்தலாம்.

#சோடா பயன்படுத்த கூடாது.

# உளுந்தை ஊற வைக்கும் போது பிரிஜ்ஜில் வைத்து ஊற விடலாம். அல்லது தோல் உளுந்து பயன் படுத்துபவர் ஐஸ் வாட்டரை பயன் படுத்தலாம்.

#புதிய உளுந்தாக இருந்தால் மாவு அதிகம் வரும். பழைய உளுந்து பயன் படுத்தினால் அளவு சற்று அதிகம் தேவைப்படும்.

#மாவு அரைத்த பின்னர் இரண்டு வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து பயன் படுத்தினால் அதிக நாட்கள் மாவு நன்றாக இருக்கும்.

#இட்லி தோசை ஊற்றிய பின்னர் மீதம் உள்ள மாவில் கரண்டி போட்டு மூடி வைக்க கூடாது. கரண்டியுடன் மாவை பிரிஜ்ஜில் வைத்தாலும் மாவு நீர்த்து புளித்து விடும்.

# அவல் (poha) இல்லை எனில் சவ்வரிசி பயன் படுத்தலாம். ஆனால் சவ்வரிசி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

# மாவை அரைத்து கலக்கும் போது அதிகம் கெட்டியாகவும் அல்லது அதிக தண்ணீராகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிகம் கெட்டியாக தெரிந்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீரை சிறிது சேர்த்து கொள்ளலாம்.

#சிலர் மாவை கையினால் கரைத்தால் அதிகம் புளித்து விடும். அவர்கள் கரண்டியை பயன்படுத்தி கரைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ இட்லி அரிசி
  2. 1/2கிலோ பச்சரிசி
  3. 250கிராம் உளுந்து
  4. 1டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. 1கப் வெள்ளை அவல்
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி 5மணி நேரம் ஊற வைக்கவும். அதே போல் வெள்ளை உளுந்து மற்றும் வெந்தயம் கலந்து நன்றாக கழுவி 3லிருந்து 5மணி நேரம் வரை ஊற வைக்கவும். அவலை நன்றாக கழுவி 1/2மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    முதலில் கிரைண்டரில் உளுந்து வெந்தய கலவையை அரைக்கவும். உளுந்து மாவு அரைக்க குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) பயன்படுத்தவும். (குளிர்ந்த நீரை பயன் படுத்துவதனால் கிரைண்டர் மோட்டார் அதிக சூடாகாமல் இருக்கும். இதனால் மாவின் உபரி அதிகமாகும். உளுந்து அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது சேர்த்து அரைக்கவும். 2ஆம் படத்தில் உள்ளவாறு கையில் மாவை அள்ளினால் ஊற்றாமல் திக்காக இருக்க வேண்டும்.

  3. 3

    உளுந்த மாவை அதிகமாக 20லிருந்து 30நிமிடம் அரைத்தால் போதும். பின்னர் உளுந்து மாவை அள்ளிய உடன் கிரைண்டரில் அவலை சேர்த்து 1நிமிடம் ஓட விடவும். பின்னர் 1கப் அளவு குளிர்ந்த நீரை கிரைண்டரில் சேர்த்து பின்னர் அரிசியை சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் சேர்த்த பின் அரிசி சேர்ப்பதால் அரிசி கிரைண்டரின் கல்லில் ஒட்டாது).

  4. 4

    அவ்வப்போது சிறிது சிறிதாக குளிர்ந்த நீரை சேர்த்து நன்றாக (ரவை போல் இல்லாமல் இன்னும் சற்று நைசாக அரைக்கவும்). அரைக்கவும். அரிசி மாவை 3/4மணி நேரம் முதல் 1மணி நேரம் வரை அரைக்கலாம். (அவரவர் கிரைண்டருக்கு ஏற்ப நேரம் மாறுபடும்). பின்னர் அரைத்த அரிசிமாவை உளுந்த மாவுடன் நன்றாக கலக்கவும். (தற்போது உப்பு சேர்க்க தேவை இல்லை).

  5. 5

    மாவை குறைந்தது 8மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் மறுநாள் பார்க்கும் போது மாவு படத்தில் உள்ளவாறு நுரை போன்று புளித்து காணப்படும். அந்த மாவை கரண்டிக் கொண்டு ஒருமுறை நன்றாக கலந்து பின்னர் அதில் தேவையான மாவை மட்டும் தனியாக எடுத்து உப்பு சேர்த்து இட்லி அல்லது தோசை வார்த்து உண்ணலாம்.

  6. 6

    மாவில் உப்பு சேர்க்காமல் பிரிஜ்ஜில் வைத்து பயன் படுத்துவதனால் மாவு நீர்த்து போகாமல் இருக்கும். மாவில் சோடா சேர்க்க தேவையில்லை. இட்லி தட்டில் துணி பயன்படுத்தி இட்லி சுடுவதனால் சூடாக பரிமாற இயலும். மிகவும் மிருதுவான இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes