இடியாப்பம், கடலைக்கறி

வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது .
இடியாப்பம், கடலைக்கறி
வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை உப்பு, ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசி மாவில் ஊற்றி கரண்டியின் பின் பகுதியால் நன்கு கலக்கவும்.
- 3
மாவு சூடு சற்று குறைந்ததும் கையால் பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை இடியாப்ப உழக்கில் வைத்து இட்லித் தட்டில் பிழிந்து இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின்னர் குக்கரில் நான்கு விசில் வைத்து இறக்கவும்.
- 6
ஒரு கடாயில் மிளகாய் வத்தல், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, மல்லி சேர்த்து எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- 7
தக்காளி, வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
- 8
மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலாப் பொருட்களுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
- 9
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
- 10
வேக வைத்த இடியாப்பத்தோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
-
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை
#அரிசிஉணவுவகைகள்பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும். Natchiyar Sivasailam -
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம் Vijayalakshmi Velayutham -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
-
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
-
-
-
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்