அரிசி பாயசம்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#அரிசிவகைஉணவுகள

திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம்.

அரிசி பாயசம்

#அரிசிவகைஉணவுகள

திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. பச்சரிசி. - 4 மேசைக்கரண்டி
  2. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
  3. பால் - அரை லிட்டர்
  4. சீனி - ஒரு கப்
  5. முந்திரிப் பருப்பு - 8
  6. கிஸ்மிஸ் பழம் - 10
  7. பாதாம் துண்டுகள். - அலங்கரிக்க
  8. ஏலக்காய் - 2
  9. நெய். - 2 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த அரிசியுடன், தேங்காய்த் துருவல், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதை அரை லிட்டர் பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

  4. 4

    அரைத்த அரிசி நன்கு வெந்ததும் சீனி சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

  5. 5

    நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும். பாதாம் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes