பேரீச்சம் பழப் பாயசம் (Peritcham pazha payasam recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பேரீச்சம் பழப் பாயசம் (Peritcham pazha payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பழ
  2. 4 டேபிள் ஸ்பூன் சீனி
  3. 1 டேபிள் ஸ்பூன் ரவை
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1 கப் தண்ணீர்
  6. 1 டேபிள் ஸ்பூன் முந்திரிப் பருப்பு
  7. 1 டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ்
  8. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  9. 20 பேரீச்சம் பழம்
  10. 1/2 லிட்டர் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பேரீச்சம் பழத்திலுள்ள விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பேரீச்சம் பழத்தை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

  4. 4

    பேரீச்சம் பழம் நன்றாக வெந்து குறுகி வரும் போது தீயை குறைக்கவும் ‌.

  5. 5

    பின்னர் இதில் பாலை ஊற்றி நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  6. 6

    பாலும், பேரீச்சம் பழமும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது சீனியும்,ரவையும் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொடுக்கவும். (இனிப்பு தேவைக்கு தகுந்தவாறு சேர்த்து கொள்ளலாம்)

  7. 7

    பாயசம் நன்றாக இறுகி வரும் போது ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  8. 8

    இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் சேர்த்து, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி அடுப்பில் இருந்து இறக்கவும்.

  9. 9

    அருமையான சுவையில் பேரீச்சம் பழம் பாயசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes