வெற்றிலை பூண்டு சாதம்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#அரிசி வகை உணவுகள்

வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது.

வெற்றிலை பூண்டு சாதம்

#அரிசி வகை உணவுகள்

வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் உதிராக வடித்த சாதம்
  2. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. ருசிக்கேற்ப உப்பு
  4. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  5. தாளிக்க :
  6. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1/2டீஸ்பூன் கடலைப்பருப்பு, வேர்கடலை
  8. தலா 1/2 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  9. அரைக்க:
  10. 5 வெற்றிலை
  11. 3 பல் பூண்டு
  12. தலா 1/2 டீஸ்பூன் மிளகு,
  13. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்

  3. 3

    பின் அடுப்பை அணைத்து வேக வைத்த சாதம்,எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes