தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1/2கப் துவரம்பருப்பு
  2. 5-6சின்ன வெங்காயம் அல்லது 1/2 பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 3ஸ்பூன் எண்ணெய்
  5. 1/2டீஸ்பூன் கடுகு உளுந்து
  6. கருவேப்பிலை சிறிது
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1முள்ளங்கி
  10. 1கேரட்
  11. 5-6துண்டு முருங்கைக்காய்
  12. மல்லித்தழை சிறிதளவு
  13. 2-3ஸ்பூன்‌ குழம்பு தூள்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

  2. 2

    வெந்த பருப்பை கிண்ணத்தில் மாற்றி குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்

  3. 3

    வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.நன்றாக வதக்கவும்

  4. 4

    காய்கறிகள் சேர்த்து உப்பு குழம்பு தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வெந்த பருப்பை சேர்க்கவும்.

  5. 5

    தண்ணீர் சேர்த்து மல்லித்தழை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சாம்பார் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes