பீட்ரூட் ரசம்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#மதியஉணவுகள
பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பீட்ரூட் தோல் சீவி நறுக்கியது
  2. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 1டீஸ்பூன் நெய்
  5. 1/2டீஸ்பூன் எண்ணெய்
  6. 1டீஸ்பூன் கடுகு
  7. 1/2டீஸ்பூன் சீரகம்
  8. 1 மிளகாய் வற்றல்
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. 1 மூடி எலுமிச்சை சாறு
  11. வறுத்து அரைக்க :
  12. தலா 1 டீஸ்பூன் மிளகு, சீரகம்
  13. 2 மிளகாய் வற்றல்
  14. 1/2டீஸ்பூன் பெருங்காய பொடி
  15. 1டீஸ்பூன் துவரம் பருப்பு
  16. 1டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  17. கறிவேப்பிலை-சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பானில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் பீட்ரூட்டை ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.வெந்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்

  3. 3

    வெந்த பீட்ரூட்டுடன் வறுத்த பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  4. 4

    பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் ஒரு கப் தண்ணீர்,மஞ்சள் தூள், உப்பு, மற்றும் வேக வைத்த பீட்ரூட் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்

  5. 5

    பின் அதில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம்,மிளகாய் வற்றல் தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes