இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#குழந்தைகள்டிபன்ரெசிபி

இனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் மக்ரோனி பாஸ்தா
  2. 2 கப் தண்ணீர்
  3. 1 வெங்காயம்
  4. 1 சிறிய தக்காளி
  5. 1 கேரட்
  6. 3 பீன்ஸ்
  7. 3 ஸ்பூன் ஸ்வீட் கார்ன்
  8. இஞ்சி பூண்டு சிறிதளவு
  9. 2 ஸ்பூன் சமையல் எண்ணை
  10. 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  11. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  15. 1/2 ஸ்பூன் சில்லி சாஸ்
  16. 1/4 ஸ்பூன் சோயா சாஸ்
  17. கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 1 கப் பாஸ்தா அதில் சேர்த்துக் கொள்ளலாம்

  2. 2

    7 நிமிடம் விடவும் பிறகு பாஸ்தா நன்றாக வெந்தவுடன் உடனடியாக ஒரு பில்டர் மூலமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த காய்கறி வேணுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் கேரட் பீன்ஸ் ஸ்வீட் கார்ன் வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு எடுத்துக்கொண்டேன்

  4. 4

    ஒரு பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சிறிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளலாம்

  5. 5

    வெங்காயம் இஞ்சி பூண்டு நன்றாக வதங்கிய உடன் ஒரு சிறிய தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்

  6. 6

    குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகள் கேரட் பீன்ஸ் அத்துடன் சிறிதளவு உப்பு 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்

  7. 7

    காய்கறிகள் நன்றாக வதங்கிய பின், டொமேட்டோ கெட்சப் 2 ஸ்பூன், சோயா சாஸ் 1/2 ஸ்பூன், சில்லி சாஸ் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்

  8. 8

    பிறகு வேக வைத்திருந்த மக்ரோனி பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடலாம்

  9. 9

    இப்போது மிகவும் சுவையான இந்திய முறையில் மக்ரோனி பாஸ்தா தயாராகிவிட்டது குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து அவர்களுக்கு கொடுக்கலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes

More Recommended Recipes