சேமியா பாயாசம்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 கப்சேமியா
  2. 5 கப் & 3 கப்தண்ணீர்
  3. 6 கப்பால்
  4. 1 & 1/2 கப்சர்க்கரை
  5. 1 மேஜைக்கரண்டிநெய்
  6. 10முந்திரி
  7. 10திராட்சை
  8. 1 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒர் கடாயில் நெய் ஊற்றி சேமியாவை வறுத்துக் கொள்ளவும்(பொன்னிறமாக)

  2. 2

    அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி,திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தன்ணீர் ஊற்றி சேமியாவை மிருதுவாகும் வரை வேகவிடவும்.

  4. 4

    வெந்ததும் தண்ணீர் வடித்து விட்டு தனியாக வைக்கவும்.

  5. 5

    பாலில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடிகனமான பாத்திரத்தில் காய்ச்சவும்(மிதமான தீயில்-பால் பாதியாக குறையும் வரை)

  6. 6

    பிறகு அதில் வேகவைத்த சேமியா மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

  7. 7

    10 நிமிடம் வேக விட்டு,ஏலக்காய் பொடி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

  8. 8

    அதில் முந்திரி,திராட்சை சேர்த்து கலக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes