பிஸிபேளாபாத்!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

பிஸிபேளாபாத்!

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி - 1 டம்ளர்,
  2. துவரம் பருப்பு - 3/4 டம்ளர்,
  3. கத்தரிக்காய் - 2,
  4. செளசௌ - 1/2,
  5. பீன்ஸ் - 10,
  6. பெரிய கேரட் - 1,
  7. உருளைக்கிழங்கு - 1,
  8. பச்சைமிளகாய் - 2,
  9. தக்காளி - 2,
  10. சின்ன வெங்காயம் - 15,
  11. சாம்பார் பொடி - 2½ டீஸ்பூன்,
  12. புளி - எலுமிச்சை அளவு,
  13. மஞ்சள் தூள் - சிறிது,
  14. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
  15. கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
  16. உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
  17. அரைக்க..
  18. நெய் - 1 டீஸ்பூன்,
  19. பட்டை - 2,
  20. கிராம்பு - 2,
  21. துருவிய தேங்காய் - 1/2 மூடி
  22. வற்றல் - 6

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் நெய் விட்டு அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், பிஸிபேளாபாத் பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதி வந்ததும் காய்கறிகளை சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.

  3. 3

    கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வெந்த சாதத்தில் கொட்டவும். 2 டீஸ்பூன் வறுத்து அரைத்த பொடியையும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி, சிறு தீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும். கடைசியாக ஒரு சட்னி கரண்டி அளவு நெய்யை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes