உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பேர்
  1. 20சின்ன வெங்காயம் தோலுரித்து இரண்டாக நறுக்கியது
  2. 8 சின்ன வெங்காயம் தோலுரித்து பொடியாக அரிந்தது
  3. 100 மிலி புளித்தண்ணீர்
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  5. தேவையானஅளவு உப்பு
  6. 5மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  7. கடுகு உளுந்தம் பருப்பு
  8. வறுத்து அரைக்க
  9. 3 தேக்கரண்டி மல்லி விதை
  10. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  11. 5மிளகாய் வத்தல்
  12. 1/4 கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், மல்லி விதை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.

  2. 2

    வறுத்தவற்றை ஆறவைத்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  3. 3

    மூன்று மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் புளித்தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

  5. 5

    மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

  6. 6

    ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கி உள்ளித் தீயலில் சேர்க்கவும்.

  7. 7
  8. 8

    சூடான சாதத்துடன் உள்ளித் தீயலைப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes