திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram 14
*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம்.

திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil

#vattaram 14
*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் மைதா மாவு /கோதுமை மாவு
  2. 1/2 கப் தயிர்
  3. 1/4 டீஸ்பூன் சோடா உப்பு
  4. 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  5. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  7. 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  8. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு பொடியாக நறுக்கியது
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர்த்து ஸஅனைத்து பொருட்களையும் சேர்த்து நன்குகலந்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு சிறிய குழிக்கரண்டில் கலந்து வைத்துள்ள மாவை எடுத்து ஊற்றவும்.

  3. 3

    சிறிது வெந்ததும் பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வரும்வரை பிரட்டி கொண்டே இருக்கவும்.

  4. 4

    இப்பொழுது பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் சுவையான திருவாரூர் ஸ்பெஷல் திடீர் கார போண்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes