உள்ளி வெங்காயம் ஊறுகாய் (Ulli Vengayam Urugaai Recipe in Tamil)
#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சீரகம்,வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.ஊறுகாய் மசாலா பொடி தயார்.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சிறு வெங்காயம் போட்டு கிளறவும்.
- 3
சிறிது நிறம் மாறிய பின் வெங்காயத்தை வெளியே எடுத்து கொள்ளவும்.அதனை இரண்டு பங்கு பிரித்து அதில் ஒரு பங்கு மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ளவும்
- 4
பின்னர் அதே கடாயில் சீரகம், கடுகு உளுந்து பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய்,பெருங்காயம் பொடி சேர்த்து கிளறவும். இப்போது அரைத்த வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.
- 5
நன்றாக கிளறிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.கிளறிய பின் புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அரைத்த பொடியினை சேர்த்து கிளறவும். சுவைக்கு ஏற்ற படி சேர்த்து கொள்ளவும்.சிறிது நேரம் அடுப்பை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
- 6
இப்போது எண்ணெய் பிரிந்து வரும் அப்போது சிறதளவு வெல்லம் சேர்த்து கிளறவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான உள்ளி வெங்காயம் ஊறுகாய் தயார்.இதனை பிரிட்ஜில் 4-5 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்