குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)

#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர்.
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க வேண்டியவைகளை அரைத்து கொள்ளவும்.
- 2
இஞ்சி பூண்டு விழுதாக அரைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்தூள், உப்பு சேர்த்து சிக்கனை ஊறைவைக்கவும்
- 3
தாளிக்க தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்
- 4
குக்கரில் நெய், கடலை, தேங்காய் எண்ணெய் தலா ஒரு கரண்டி ஊற்றவும். பின்பு அதில் பெரிய வெங்காயம், தக்காளி, ப மிளகாய், புதினா காெத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தயிர், உப்பு, மஞ்சள்தூள் என ஒவ்வொன்றையும் நன்கு வதக்கி ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். இஞ்சி பூண்டு, தயிர், மிளகாய்தூள், உப்புடன் ஊறைவைத்த சிக்கனை சேர்க்கவும். நன்கு வதக்கி 10 நிமிடம் குக்கர் மூடியை மூடி வைக்கவும்.
- 5
சிக்கன் பாதி வெந்தவுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். உப்பு சேர்க்கவும். 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- 6
1 விசில் வந்தவுடன் 10 நிமிடம் மிதமான தீயில் விட்டு
கேசை அணைக்கவும். 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான குழந் தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்