சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)

#Kids1
உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட்
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1
உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை காய் மற்றும் உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி நன்கு வேக வைக்கவும்.
- 2
பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் 1 ஸ்பூன், துண்டுகளாக்கிய இஞ்சி இவற்றை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த இஞ்சி பூண்டு விழுதுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து பிசைந்து கொள்ளவும்.
- 4
வேகவைத்த முருங்கை காயின் சதை பகுதியை வழித்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
அதனுடன் காரப்பொடி 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், ரஸ்க் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 6
சிறிது சோயாபீன்ஸ் மாவு 1 ஸ்பூன் சேர்த்து பிசைந்து சிறு சிறு வடை போன்று தட்டி கொள்ளவும்.
- 7
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டிய வடைகளை போட்டு பொன்முறுவலாக எடுத்து ரஸ்க் தூளில் பிரட்டி எடுக்க சுவையான சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்