சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, மஞ்சத்தூள், கொத்தமல்லித்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து இதில் தண்ணீர் 7-8 கப் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்.
- 2
அடுத்தது கடாயில் நெய் ஊற்றி, சீரகம், மிளகு, வெந்தயம், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு கலந்து வைத்த தயிரை ஊற்றி 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவிட்டு பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 3
அடுத்தது பக்கோடா செய்ய :- கடலை மாவு, பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கொத்துமல்லி இலை, மிளகாய்தூள், சீரகம் மற்றும் உப்பு தேவையான சேர்த்து பிசையவும். தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்துவிடவும். பொரிப்பதற்க்கு தேவையான அளவு எண்ணெய் சூடு செய்து, பக்கோடா மாவை போடவும். பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். செய்து வைத்த கடியில் பக்கோடாவை சேர்த்து நன்கு கலந்து சூடாக ரொட்டி ஜீரா ரைஸ் கூட பரிமாறவும்.
- 4
பஞ்சாபி ஸ்டைல் பகோடா கடி தயார்...
Similar Recipes
More Recipes
- பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
- பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
- பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
- பால் கேசரி(milk kesari recipe in tamil)
- பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)















கமெண்ட் (7)