வெஜிடபள் பிரியாணி

#அரிசி உணவுகள்
மிகவும் எளிதாக விருந்தினரை அசத்தும் சுவையான பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் சுடானதும் ஆயில் மற்றும் நெய் சேர்க்கவும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து சிறிய தீயில் வைத்து வாட்டவும்
- 2
இனி பெரிய வெங்காயம் சேர்த்து வாட்டவும், இதன் இடையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுக்கவும்
- 3
பெரிய வெங்காயம் வாடியதும், இஞ்சிபூண்டு விழுது, மற்றும் மிக்ஸ்யில் அடித்த கலவை சேர்த்து வாட்டவும், இதன் இடையில் அரிசி தண்ணீரில் இருந்து மாற்றி வைக்கவும்
- 4
வாடியதும், காய்கறிகள். தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,
- 5
ஐந்து நிமிடம் கழிந்து, கழுவி வைத்த அரிசி சேர்க்கவும்
- 6
5-8 நிமிடம் வாட்டவும், பின்னர் தண்ணீர் ஆறு கிளாஸ் சேர்த்து, எலுமிச்சை சாறு ஊற்றி, உப்பு தேவையான அளவு சேர்த்து மீடியம் தீயில் வைத்து 5. நிமிடம் அடைத்து வைக்கவும்
- 7
பின்னர் 4 நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்
- 8
பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும், 15 நிமிடம் கழிந்து திறந்து மல்லி இலை சேர்க்கவும்
- 9
சூடான, சுவையான வெஜிடபள் பிரியாணி, உங்களுக்கு விருப்பமுள்ள சைட் கிரேவியுடன் பரிமாறவும்
Similar Recipes
More Recipes






கமெண்ட்