கேரட் பீன்ஸ் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ ரவுண்ட் ஷேப்பில் மற்றும் பீன்ஸ் ஐ நீளதுண்டுகளாக நறுக்கி வைக்கவும் வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை நெய் ஊற்றி வறுத்து பொடி செய்து கொள்ளவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
- 4
பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சீரகத்தூள், உப்பு, வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 5
கேரட் பீன்ஸ் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்ற குருமா
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்