மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டனை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதே குக்கரில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை பட்டை கிராம்பு பட்டை தூள் சேர்த்து வதக்கவும் கால் ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். அத்தோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காய் துருவல் நான்கு முந்திரிப்பருப்பு கால் ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
தக்காளி வதங்கிய பின் வதக்கிய மட்டனை சேர்க்கவும் பின்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். தூண்களின் பச்சை வாசனை சென்றபின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது உப்பை சரி பார்த்து கொள்ளவும்.
- 5
தண்ணீர் குடித்த பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். கொதித்த பின் குக்கரை மூடி 8 விசில் விடவும். விசு சென்றபின்பு 5 நிமிடம் குழம்பை சிம்மில் வைத்து வதக்கி விடவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 6
பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்