நெய் சாதம் (Nei saatham recipe in tamil)

#onepot
#ilovecooking
நெய் சாதம் செய்வது எளிதானது. காய்கறி இல்லாத போது உடனே செய்யும் இந்த சாதம் சுவையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை நன்கு கழுவி உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி லேசாக காய்ந்த பிறகு பட்டை, லவங்கம், முந்திரி மற்றும் ஏலக்காயை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 4
கீரிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு அரை நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான உப்பு சேர்த்து ஆறிய சாதத்தை கொட்டி கிளறவும்.
- 5
இறுதியில் வதக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும். சுவையான நெய் சாதம் தயார். இந்த சாதத்திற்கு உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் ஊறுகாய் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)