பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)

#pongal
பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் .
பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)
#pongal
பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
பொங்கல் காய்கறிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் பூண்டு இஞ்சி கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
மண்பானை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்
- 3
சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொன் நிறமாக மாறியவுடன் அதில் தக்காளி பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அது நாம் நறுக்கி கழுவி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்
- 4
காய்கறிகள் சேர்த்தவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை கொஞ்சம் வேக வைக்கவும் பிறகு அதில் உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வைக்கவும் காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
- 5
பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் கிளறி விட்டு இறக்கினால் மிகவும் சுவையான காய்கறிகள் வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)
- ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
- முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- கீரை சாதம் (Keerai satham recipe in tamil)
- பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)

















கமெண்ட்