ஆட்டுக்கறி நாட்டுக் கத்திரி குழம்பு

#nv
பொதுவாக அசைவ உணவுகளில் ஆட்டுக்கறியில் முதலிடம் தரலாம். பதில் சற்று கொழுப்பு அதிகமாக இருக்கும் அதனை குறைக்க நாட்டுக் கத்திரிக்காய் சேர்த்து சமைக்கலாம் நாட்டுக் கத்திரிக்காய் சேர்த்து சமைக்கும் பொழுது கொழுப்பு சத்தானது குறைவதோடு சுவையும் அலாதியாக இருக்கும் அதனால் எங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் குழம்பு டன் நாட்டு கத்திரிக்காயை சேர்த்து சமைப்போம் அதனால் அந்த ரெசிபியை பகிர்கின்றேன்.

சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் கத்திரிக்காய் இரண்டையும் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மசாலா பொடிகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும் எடுத்து வைத்துக் கொள்ளவும் மல்லி கருவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மட்டனை அரிசி கழுவிய நீரில் சேர்த்து மஞ்சள் பொடி சோம்பு பொடி நசுக்கிய இஞ்சி சேர்த்து வேக வைக்கவும்
- 4
வெங்காயம் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
- 7
இப்பொழுது வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் வேக விடவும்
- 8
கத்தரிக்காய் சேர்த்து வேகவிடவும்
- 9
தேங்காயை மிக்ஸியில் சேர்க்கவும்
- 10
தேங்காயை நைசாக அரைத்து எடுக்கவும்
- 11
தேங்காயை குழம்புடன் சேர்த்து விடவும்
- 12
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 13
குழம்பு நன்றாகக் கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்
- 14
இப்பொழுது மல்லி இலை தூவி சர்வின் கோவிலுக்கு மாற்றிப் பரிமாறவும் சுவையான நாட்டு கத்தரிக்காய் குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்