ஹைதராபாதி நிஜாமி ஹண்டி (Hyderabadi Nizami Handirecipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உரித்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
மசாலாத்தூள் எல்லாம் எடுத்து வைக்கவும். இஞ்சி,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.கஸ்தூரி மேத்தி எடுத்து வைக்கவும்.
- 3
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்,பட்டர் சேர்த்து சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு,தக்காளி,முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிடவும்.
- 4
சூடாரியவுடன் எடுத்து மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
- 5
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்,பட்டர் சேர்த்து சூடானதும்,சீரகம் சேர்க்கவும்.
- 6
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த முட்டை சேர்த்து வதக்கவும். மசாலாத்தூள் எல்லாம் சேர்க்கவும்.
- 7
மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 8
நன்கு கலந்து விட்டு,பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 9
பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி, முந்திரி விழுதை சேர்க்கவும்.
- 10
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 11
நன்கு கொதித்து குழம்பு கெட்டியானதும், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், கஸ்தூரி மேத்தி பொடித்து சேர்த்து இறக்கினால் ஹைதராபாத்தி நிஜாமி ஹண்டி தயார்.
- 12
தயாரான குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து சுவைக்கவும்.
- 13
இப்பொழுது மிகவும் சுவையான ஐதராபாத்தி நிஜாமி ஹண்டி முட்டை கிரேவி சுவைக்கத் தயார்.
- 14
இந்த கிரேவி சப்பாத்தி, பிளைன் பிரியாணி, நெய் சாதம்,குஸ்கா எல்லா உணவுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
-
-
-
-
ஹைதராபாதி ஹலீம் (Hyderabadi haleem recipe in tamil)
#jan1இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவு இது. இதை இஸ்லாமிய வருடப் பிறப்பின் போது செய்வோம். இந்த உணவை இவ்வருடத்தின் முதல் வார உணவாக நான் பகிர்ந்து கொள்கிறேன். இதைத் தலீம் என்றும் கூறுவர். இதில் பலவகையான பருப்புகள் மற்றும் கோதுமை கூடவே கறி சேர்ந்து இருப்பதால் புரோட்டின் நிறைந்த உணவாகும். இது எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவர். பற்கள் இல்லாத தாத்தா பாட்டிகள் விரும்பி சாப்பிடுவர். ஏனென்றால் இதை வாயில் வைத்தால் கரையும். Asma Parveen -
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
இந்த சூவையான கிரேவியை செய்த பாருங்கள்.#ve குக்கிங் பையர் -
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (2)