😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)

#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் சோம்பு பூண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
- 3
அதனுடன் ஊற வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 4
இந்த மாவு வடை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
- 5
மாவை இட்லிப் பாத்திரத்தில் எண்ணெய் தடவி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 6
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்க்க வேண்டும்.
- 8
அதனுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து கிளற வேண்டும்.
- 9
வெங்காயம் வதங்கிய பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். இதனுடன் வேக வைத்த மாவை உதிர்த்து வைத்து கிளற வேண்டும்
- 10
தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 11
கலவை நன்றாக கலந்தவுடன் தேங்காயை அதில் ஊற்ற வேண்டும்
- 12
தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தண்ணீரும் தேவையான அளவு சேர்க்க வேண்டும்
- 13
கொதி வரும்வரை நன்றாக கிளர வேண்டும். இப்பொழுது கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்
- 14
இப்போது நமது வடையில்லா வடகறி தயாராகிவிட்டது மிகவும் சுவையாக இருக்கும். இது இட்லி தோசை இடியாப்பம் மற்றும் சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற. பொருத்தமான உணவு
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட் (6)