செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம், சோம்பு,முழு மிளகு, வரமிளகாய், கல்பாசி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுத்தது நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இதில் குழம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு நன்கு கொதிக்க விடவும் பிறகு அரைத்த மசாலா சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
எப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறலாம்.
- 4
செட்டிநாடு மீன் குழம்பு ரெடி....
Keywords
Similar Recipes
More Recipes
- கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
- எளிதான பாசிப்பருப்பு டால்(pasiparuppu dall recipe in tamil)
- செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)
- கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)










கமெண்ட்