பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)

பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் தண்ணீரில் தக்காளி வெங்காயம் இலவங்கப்பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி இஞ்சி பூண்டு காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து பாத்திரத்தை மூடி விட்டு 30 நிமிடம் குக் பண்ணுங்கள்.
- 2
மாரினேஷன் 1- 400 கிராம் சிக்கனில் தேவையான அளவு உப்பு எலுமிச்சை பழம் சாறு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 15 - 20 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 3
மாரினேஷன் 2- சிக்கனில் இருந்து நீர் வற்றி அதில் எலுமிச்சை பழம் சாறு, காஷ்மீரி மிளகாய்த் தூள், என்னைய தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து 15 - 20 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 4
30 நிமிடத்துக்கு பிறகு வேக வைத்த தக்காளி வெங்காயம் மற்றும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
- 5
கிரேவி செய்வதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்த மற்றும் இஞ்சி சேர்த்து வடிகட்டின தக்காளி வெங்காயம் மற்றும் அனைத்து பொருட்களின் விழுது சேர்த்து சமைக்கவும்.
- 6
கிரேவி சமைக்கும் வரை மேரிநெட் செய்த சிக்கனை கொஞ்சம் என்னையில் வறுத்துக்கொள்ளுங்கள்.
- 7
சிக்கன் வறுத்த பின் சிக்கனை கிரேவியில் சேர்த்து அதில் கசூரி மேத்தி சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நாலு நிமிடம் சமைக்கவும். பட்டர் சிக்கன் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்