வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.
- 2
இதில் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மசாலாவை வேகவிடவும்.
- 3
பிறகு இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும் பச்சை வாசனை போன பின் காய்கறிகள் அனைத்தையும் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி தனியாக ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கி அந்த வெங்காயம் தக்காளி மசாலாவை சேர்க்கவும்.
- 4
அதன்பின் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மசாலாவை சேர்க்கவும்.(கடாய் மசாலா வைத்து குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணி இல்லாத சட்டியில் வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்)
- 5
கடை மசாலா சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்