வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்
  1. 1 பெரிய வெங்காயம்
  2. 1/2 கப் கேப்ஸிகம்
  3. 2 பேபி கார்ன்
  4. 1/4 ஸ்வீட் கான்
  5. 200 கிராம் மொட்டு காளான்
  6. 2 தக்காளி
  7. 1பிரியாணி இலை
  8. தலா 1 பட்டை கிராம்பு ஏலக்காய்
  9. 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  10. நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  11. 3 மேஜைக்கரண்டி நெய்
  12. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  13. 1 தேக்கரண்டி மல்லி தூள்
  14. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  15. தேவையானஅளவு உப்பு
  16. தேவையானஅளவு தண்ணீர்
  17. கடாய் மசாலா தயாரிக்க:
  18. 1 மேஜைக்கரண்டி மல்லி
  19. 1/2 தேக்கரண்டி சீரகம்
  20. 1/4 தேக்கரண்டி மிளகு
  21. 1 துண்டு பட்டை
  22. 3 ஏலக்காய்
  23. 2 கிராம்பு
  24. 4 காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.

  2. 2

    இதில் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மசாலாவை வேகவிடவும்.

  3. 3

    பிறகு இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும் பச்சை வாசனை போன பின் காய்கறிகள் அனைத்தையும் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி தனியாக ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கி அந்த வெங்காயம் தக்காளி மசாலாவை சேர்க்கவும்.

  4. 4

    அதன்பின் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மசாலாவை சேர்க்கவும்.(கடாய் மசாலா வைத்து குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணி இல்லாத சட்டியில் வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்)

  5. 5

    கடை மசாலா சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes