மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)

மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் இரண்டு பட்டை 3 லவங்கம் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்
- 2
இப்போது 3 டேபிள் ஸ்பூன மல்லி சேர்த்து வறுக்கவும உடன் மிளகு ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு சேர்த்து வறுக்கவும்
- 3
பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து வறுக்கவும்
- 4
வேறு ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுக்கவும் அதனுடன் தேங்காய் சேர்த்து வறுக்கவும்
- 5
இப்போது ஒரு மிக்சியில் அனைத்து பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 6
ஒரு குக்கரில் மட்டன் சேர்த்து அதனுடன் உப்பு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து 3 விசில் விடவும்
- 7
இப்போது ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 8
இப்போது தாலிப்புடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 9
பின் குக்கரில் உள்ள மட்டனை சேர்த்து கொள்ளவும்
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் பிறகு ஒரு தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 11
மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்