மசாலா புலாவ்(masala pulao recipe in tamil)
மசாலா புலாவ்(masala pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிய கேரட் காலிபிளவர் காளான் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வெங்காயத்துடன் வதக்கவும். வதங்கியதும் மிளகாய்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் நறுக்கிய தக்காளி தயிர் சேர்த்து மசாலா பிரட்டி காய்களுடன் வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்த பின் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதி வர வைக்கவா கொதித்த பின் அரைமணி நேரம் ஊறிய பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
- 4
கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சரிபார்த்து சேர்க்கவும். மீத முள்ள கொத்தமல்லி புதினா இலைகளைத் தூவி மூடி போட்டு மிதமான தீயில் தண்ணீர் மற்றும் அரிசி சரிபங்கு வரும் வரை வேக விடவும்.
- 5
பிறகு அடியில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை குறைத்து கால் மணி நேரம் தம்முக்கு வைத்து அடுப்பை அணைத்து பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்