மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை (எலும்பு) அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
- 2
இப்போது வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
இப்போது மட்டன் (எலும்பு) மஞ்சள் தூள், மட்டன் மசாலா பொடி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடங்கள் கழித்து 1/2 லி தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து விசில் போடவும்.
- 4
5-6 விசில் விட்டு காஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16601795












கமெண்ட்