சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைக்கவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கவும்.
- 4
தேங்காய் சோம்பு கசகசா முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இதை வதங்கியதும் கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி 3-4 விசில் வைக்கவும்.
- 5
பின் கேஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்