வெள்ளைப்பூண்டு குச்சி கருவாட்டு குழம்பு

இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் உணவாக கொடுக்கப்படுகிறது. முக்கியமாககுழந்தை பெற்ற தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு தாய்ப்பால் சுரப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிரசவத்தால் ஏற்படும் முதுகு வலிக்கும் ஏற்றது. இதை வாரம் இரு முறை எடுத்துக்கொள்ளலாம். இதன் செய்முறை பற்றிய விளக்கங்களை பார்க்கலாம்.

Steps
- 1
குச்சி கருவாடை தலையை நீக்கி விட்டு 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து உள்ளே உள்ள கருப்பு நிற பகுதியை நீக்க வேண்டும்.
- 2
வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
சிறிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
குச்சி கருவாடை தண்ணீரில் மூன்று அல்லது நான்கு முறை அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- 7
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்க்க வேண்டும்.
- 8
கடுகு வெடித்ததும் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 9
வெங்காயம் வதங்கியதும் வெள்ளைப்பூண்டு மற்றும் குச்சி கருவாடு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 10
வெள்ளைப்பூண்டு மற்றும் கருவாடு வதங்கியதும் புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.
- 11
பின் அதில் புளிக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- 12
10 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் வெள்ளைப்பூண்டு கருவாட்டு குழம்பு ரெடி!!
Similar Recipes
More Recipes
-

Krishna Dholakia
-

Gooey Chocolate Chip Skillet Cookie
Crumbs & Chaos
-

Barnali Debdas
-

Maggie Conlon
-

Annike ! :)
-

Kumkum Chatterjee
-

Aunty Eiko's international cuisine experience
-

Madhumita Bishnu
-

Crockpot Alfredo Italian Meatballs
Crock Pot Girl 🤡
-

Creamy Red Thai Curry Squash Soup
Lance Wilson
-

Oakes Kitchen
-

Elisa
-

Christina T
-

Simple boiled salted corn on the cob
Mrs.Naveed
-

Sadia Rajpoot
-

Jasmin Motta _ #BeingMotta
-

Umme Ali
-

Meena Saravanan
-

Dr.Madhumita Mishra
-

Kulsoom Bukhari
-

Monika Jain
-

Juhi Prakash Sewani
-

Pragati Hakim

Comments