கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.
சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3

கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)

கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.
சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பதினைந்து நிமிடங்கள்
ஐந்து பேர் சாப்பிடலாம்.
  1. 1/4கிலோ கத்தரிக்காய்
  2. 50கிராம் சாம்பார் வெங்காயம்
  3. 2டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  4. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. தாளிக்க
  8. கடுகு
  9. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பதினைந்து நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும். ***நிறைய நேரம் தண்ணீரில் வெட்டிப்போட்டு விடக்கூடாது. காய் கசப்பு ஆகிவிடும். தண்ணீரில் போடாமல் வெட்டி வைத்தால் காய் கருப்பாகி விடும்.

  2. 2

    சாம்பார் வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியை, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். *** புளியை கொதிக்கும் நீரில் ஊற வைத்தால், பிழிந்து சாறு எடுப்பது சுலபம்.

  3. 3

    இப்போது அடி கனமான பாத்திரத்தில், வெட்டி
    வைத்துள்ள கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு டீஸ் ஸ்பூன் எண்ணை, புளி கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.

  4. 4

    பத்து நிமிடம் போதும். குழம்பு ரெடி ஆகிவிடும்.பின் துருவிய தேங்காய் சேர்த்து, உப்பு சரி பார்க்கவும்.

  5. 5

    இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கொஞ்சம் வெங்காயம் சேர்த்து வதக்கி கொதிக்கும் குழம்பில் கொட்டவும். ஸ்டாவ் ஆப் செய்யவும்.

  6. 6

    இப்போது சுவையான கத்தரிக்காய் புளிக்குழம்பு சுவைக்கத் தயார். சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes