வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2வாழைப்பழம்
  2. 1 கப் மைதா (அ) கோதுமை மாவு
  3. 1/2 கப் சர்க்கரைத்தூள்
  4. 1/4 கப் கெட்டித் தயிர் (அ) 1 முட்டை
  5. 1/4 கப் எண்ணெய் (அ) உருக்கிய வெண்ணெய்
  6. 1-1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. சிறிதுஉப்பு
  9. 1/2டேஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  10. சிறிதுமுந்திரி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி மைதா தூள் சேர்த்து தட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு தோசை சட்டியை 15 நிமிடம் ஃப்ரீ ஹிட் செய்து கொள்ளவும்

  2. 2

    இரண்டு வாழைப்பழத்தை கைகளால் நன்கு மசித்துக்கொள்ளவும் இல்லையெனில் மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சர்க்கரை தூள், தயிர்,எண்ணெய் சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்க்கவும்

  5. 5

    இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கிரீம் போல செய்து கொள்ளவும்

  6. 6

    பிறகு இதில் மைதா மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு இந்த கலவையை நன்றாக கிளறி கொடுக்கவும் படத்தில் காட்டியவாறு கெட்டியாகவும் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும் எடுத்து விடும்போது அடுக்கடுக்காக வர வேண்டும் இதுவே சரியான பதம் தண்ணீராக இருப்பதாக தெரிந்தால் சிறிது மைதா மாவு கலந்து கொள்ளவும்

  7. 7

    இந்த கலவையை மைதா மாவு கலந்த கனமான பாத்திரத்தில் ஊற்றி காற்றையே அடைப்பை நீக்க 2 முறை தட்டவும் பிறகு இதில் விருப்பமெனில் முந்திரிப்பருப்பை மேலே சேர்த்து காற்றுப் புகாதவாறு மூடி மேல் துணியைச் சுற்றி தோசை சட்டியை மேல் 35 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  8. 8

    35 நிமிடம் கழித்து ஒரு குச்சியை கேக்கினும் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக்க வெந்துவிட்டது என்று அர்த்தம் மாவு ஒட்டி இருந்தால் மீண்டும் 5 அல்லது 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  9. 9

    10 நிமிடம் கழித்து கத்தின் உதவிகொண்டு ஓரங்களில் இடம் விடவும் கேக்கை பரிமாறும் தட்டில் மாற்றவும்

  10. 10

    சுவையான வாழைப்பழ கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes