கூல் வடகம் (Koozh vadakam recipe in tamil)

Muthu
Muthu @cook_26485860

கூல் வடகம் (Koozh vadakam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்இட்லி அரிசி
  2. 2 ஸ்பூன்சீரகம்
  3. உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு ஆட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் தேவையான அளவு சீரகம் சேர்க்கவும்.

     

  3. 3

    அடி கனமான பாத்திரத்தில் எட்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். பின் அதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.

  4. 4

    மாவு வெந்தவுடன் சிறிது நிறம் மாறி நல்ல வாசனையுடன் கூழ் பதத்திற்கு வரும். அது தான் வடகம் ஊற்றுவதற்கு சரியான பதம்.

  5. 5

    பின் சுத்தமான துணியை வெயில் படும் இடத்தில் விரிக்கவும். வடகம் கூழை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து சின்ன சின்ன வட்டமாக ஊற்றவும்.

  6. 6

    வடகம் நன்றாகக் காயும் வரை வெயிலில் காயவிடவும். 

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muthu
Muthu @cook_26485860
அன்று

Similar Recipes