வடகம் (vadagam Recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

வடகம் (vadagam Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
நிறைய
  1. 600கிராம் அரிசி(3கப்)
  2. 100கிராம் மாவுஜவ்வரிசி(1கப்)
  3. 10பச்சை மிளகாய்
  4. 2ஸ்பூன் சீரகம்
  5. 1கட்டி பெருங்காயம்
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    அரிசி, ஜவ்வரிசி தனித்தனியே 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    மிக்சியில் சீரகம், பச்சை மிளகாயை கொரகொரவென அரைக்கவும்.

  3. 3

    கிரண்டரில் ஊறவைத்த அரிசி, ஜவ்வரிசி, அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். அரைத்த மாவை ஆப்பமாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 8கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும், அதில் ஊறவைத்த பெருங்காயம், அரைத்த மாவு ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

  5. 5

    மீடியம் பிளேமில் வைத்து கிளறவும். 15நிமிடத்தில் வத்தல் மாவு ரெடி. தண்ணிரில் கையை நினைத்து மாவை தொட்டால் ஒட்டக்கூடாது.

  6. 6

    பிறகு உரலில் போட்டு பாலிதீன் கவரில் பிளியவும். அப்போதுதான் எடுக்க ஈசியாக இருக்கும்.

  7. 7

    இதை இரண்டு நாட்கள் காயவைத்து, டப்பாவில் மூடி வைக்கவும். நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes