தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#WEEK6
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்

தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)

#GA4
#WEEK6
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 1/2 மூடிதேங்காய்
  2. 2 கப்பாசுமதி அரிசி
  3. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  6. 1/2 ஸ்பூன்பெருஞ்சீரகம்
  7. பட்டை - 1 துண்டு
  8. பிரியாணி இலை 1
  9. ஸ்டார் பூ - 1
  10. கிராம்பு - 3
  11. வெங்காயம் - 1
  12. உப்பு தேவையான அளவு
  13. ஏலக்காய் - 2
  14. பச்சை மிளகாய் 1

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாசுமதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    தேங்காயை சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்

  4. 4

    காய்ந்ததும் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் பூ சேர்க்கவும்

  5. 5

    பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  6. 6

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  7. 7

    ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்க்கவும்

  8. 8

    பின்னர் தேங்காய் பால் உட்பட 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்

  9. 9

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  10. 10

    குக்கரை மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  11. 11

    பின்னர் சாதம் உடையாமல் கிளறி வெங்காய தயிர் பச்சடி, குருமா, அல்லது சிக்கன், மட்டன் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes