கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

பீட்சா இக்காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு அது அரோக்கியமானதாக இருந்தால் மகிழ்ச்சி தானே
#GA4
#flour
#week7

கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)

பீட்சா இக்காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு அது அரோக்கியமானதாக இருந்தால் மகிழ்ச்சி தானே
#GA4
#flour
#week7

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 2கப்கோதுமை மாவு
  2. 1 ஸ்பூன்சோடாஉப்பு
  3. 1 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1 ஸ்பூன்நெய்
  5. தண்ணீர் 2 ஸ்பூன்
  6. 6 ஸ்பூன்தயிா்
  7. வெண்ணெய் 3 ஸ்பூன்
  8. 1 ஸ்பூன்மைதா மாவு
  9. பால் 1/2 கப்
  10. 4 பல்பூண்டு
  11. இஞ்சி
  12. 1 துண்டுவெங்காயம் 1
  13. தக்காளி 2
  14. மிளகாய் தூள்
  15. சீனி 1
  16. கொடை மிளகாய் காரத்திற்கேற்ப
  17. வத்தல் பொடித்தது (chilly flaks) சிறிதளவு
  18. 1 ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கோதுமை மாவு 2 கப் எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா,1ஸ்பூன் சோடாஉப்பு போட்டுக்கொள்ளவும்

  2. 2

    1ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளவும் பிறகு உப்பு தேவைக்கேற்ப சோ்க்கவும் அத்துடன் இரண்டு ஸ்பூன் தண்ணீா் சேர்க்கவும்

  3. 3

    தயிர் 6 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும் கூறிய அளவுகளை சரியாக சேர்த்தால் இந்த பதத்தில் தண்ணீர் சோ்க்காமல் மாவு பினைந்து விடலாம் பிசைந்த மாவை ஊறவைத்துக் கொள்ளலாம்

  4. 4

    White sos தயாரிக்க வேண்டும் ஒரு pan −ல் வெண்ணெய் 2− ஸ்பூன் சேர்க்கவும் அத்துடன் 1ஸ்பூன் மைதா சேர்த்து கைவிடாமல் கிளறவும்

  5. 5

    இத்துடன் 1/2 கப் பால் சேர்த்து கை படாமல் கிளறவும் கெட்டி பதம் வந்ததும் வேறுப்பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கவும்

  6. 6

    Red sos தயாரிக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் 4 பல் பூண்டு ஒரு துண்டு இஞ்சி தக்காளி 2 சிறிதாக நறுக்கியது வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது போட்டுக் கொள்ளவும்

  7. 7

    அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும் தக்காளி, வெங்காயம் மசிந்தவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  8. 8

    ஒரு pan - ல் வெண்ணெய் சேர்த்து அத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும் அதில் காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்க்கவும் 1 ஸ்பூன் சீனீயும்சேர்த்துக்,கொள்ளவும்

  9. 9

    5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் பிறகு மாவு உருட்டவும் 2 பகுதிகளாக மாவை பிரிக்கவும் அதை சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவும்

  10. 10

    அதில் துளையிடவும் பிறகு Red sos தடவவும்

  11. 11

    பிறகு அதன் மீது white sos தடவவும் அதன் மேற்புறத்தில் நமக்கு பிடித்த காய்களை சேர்க்கலாம் நான் அதில் குடை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்திருக்கேன் பிறகு அடிக்கனமான பாத்திரத்தில் stand போட்டுக்கொள்ளவும்

  12. 12

    அதன் மீது பீட்சா தட்டை வைத்து மூடி 20 முதல் 25 நிமிடம் வைத்து வேக விடவும் நமக்கு தேவையான பீட்சா ரெடி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes