கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2 கப் அல்லது 200 கிராம்பாஸ்தா
  2. மைதா மாவு - 1/4 கப்
  3. சீஸ் - 1/2 கப்
  4. 1 டீஸ்பூன்மிளகுத்தூள்
  5. பால் - 4 கப்
  6. 1 டேபிள் ஸ்பூன்பூண்டு
  7. 1/4 கிலோபோன்லெஸ் சிக்கன் - (அல்லது) காய்கறி- 1 கப்
  8. 4 டேபிள் ஸ்பூன்வெண்ணை
  9. 1/2 டீஸ்பூன்மிக்ஸ்ட் ஹார்ப்ஸ்
  10. 1/2 டீஸ்பூன்சில்லி ப்ளேக்ஸ்
  11. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் நன்கு கொதித்த பிறகு பாஸ்தாவை சேர்த்து, பாஸ்தா வெந்தவுடன் தனியாக பாஸ்தாவை வடிகட்டி ஒரு பௌலில் மாற்ற வேண்டும்.

  2. 2

    வடிகட்டிய பாஸ்தாவில் சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி விட்டு வைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து வெண்ணை உருகிய உடன் சிக்கனை சேர்க்க வேண்டும். சிக்கனுக்கு பதில் ஒரு கப் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

  4. 4

    சிக்கன் பாதி வதங்கியவுடன் பாதி மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் சிக்கன் நன்கு வெந்த உடன் ஒரு பவுலில் மாற்ற வேண்டும்.

  5. 5

    மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து, பூண்டு சேர்த்து வதங்கியவுடன் மைதா மாவு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    மாவு பச்சை வாடை போன உடன் பால் சேர்த்து கொதித்த பிறகு சீஸ் சேர்க்கவும்.

  7. 7

    சிறிது கெட்டியான உடன் சிக்கன் மற்றும் வேகைவத்த பாஸ்தா சேர்க்கவும்.

  8. 8

    பிறகு உப்பு மற்றும் மீதமுள்ள மிளகு சேர்த்து கிளறவும். மிக்ஸ்டு ஹர்ப்ஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கிளறவும்.

  9. 9

    5 நிமிடங்கள் கழித்து ஒரு பவுலில் மாற்றி சேர்வ் செய்தால் அருமையான ப்ரேக்ஃபாஸ்ட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes